• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குற்றவாளிகளை தகுந்த ஆதாரத்துடன் பிடிக்க கோவை காவல் துறையினருக்கு சிறிய நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள்

July 17, 2019 தண்டோரா குழு

குற்றவாளிகளை கண்டறியவும், பொது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சட்டையில் பொருத்தக் கூடிய சிறிய நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் கோவை காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது.

போலீசாரிடம் தொடரும் அத்துமீறல்களை தடுக்கவும், குற்றவாளிகளை தகுந்த ஆதாரத்துடன் பிடிக்கும் வகையிலான நடவடிக்கையில் தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் சட்டையில் பொருத்தக் கூடிய சிறிய ரக கேமராக்கள் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணி புரியும் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை காவல்துறையினருக்கு இந்த கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்பட்டன.

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை மாநகர காவல் ஆணயர் சுமித் சரண், கேமராக்களை காவல் துறையினருக்கு வழங்கினார். கோவை மாநகரத்தை பாதுகாப்பு நகரமாக மாற்றும் நோக்கில் உயிர் என்ற அமைப்பின் மூலம் முதற்கட்டமாக 20 கேமராக்கள் வழங்கப்பட்டன. இந்த கேமராக்கள் 8 மணி நேரம் தொடர்ந்து இயங்ககூடியது. காற்று, மழை உள்ளிட்ட இடர்பாடுகளில் பாதிப்பிற்கு உள்ளாகாத வகையில் இந்த கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சுமித் சரண்,

தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் பணியை இனி கோவை காவல் துறையினர் தொடர்வார்கள் என தெரிவித்தார். குற்றங்களை தடுக்கும் முயற்சி இந்த திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க