• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிகாந்தின் தூரத்து அமெரிக்க உறவினராக நடிக்க ஆசைப்படும் ஹாலிவுட் நடிகர் !

June 15, 2019 தண்டோரா குழு

கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும் சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்படிப்பு மும்பையில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த பில் டூக், தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் “ நான் தமிழில் பேச மாட்டேன், ஆனால் ரஜினிகாந்தின் தூரத்து அமெரிக்க உறவினராகவோ அல்லது நயன்தாராவின் மாமாவாகவோ என்னால் நடிக்க முடியும். ஸ்ரீகர் பிரசாத் மற்றும் சந்தோஷ் சிவன் என்னை எடிட் செய்வார்களா..? அனிருத் எனக்காக ஹிட் பாடலை உருவாக்குவரா..? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?” என்று குறிப்பிட்டுள்ளார்.இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் சார் நீங்கள் தான் இது என பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க