• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவின் மாநாடு படம் துவங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

June 8, 2019 தண்டோரா குழு

சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.இப்படத்தை அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மாநாடு படத்திற்காக சிம்பு வெளிநாடு சென்று உடல் எடையெல்லாம் குறைத்து ஓரளவிற்கு பிட்டாக வந்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தின் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதி ராஜா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது..

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் துவங்க இருக்கிறது என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் அங்கு படமாக்கப்பட உள்ளன.

முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க