• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசையெல்லாம் சுட்டுத் தள்ளு – இசை உலக ஜாம்பவான்கள் சந்திப்பு

May 27, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவன்கள் என்றால் இளையராஜாவும் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் தான். இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி பாடிய பாடலுக்கு மயங்காதே ரசிகர்களே இல்லை என்றே சொல்லலாம்.

இதற்கிடையில், தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்தார் இளையராஜா.இதனால் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இந்த இரு இசையின் துருவங்களுக்குள் பெரிய பிரிவு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடுகளில் நடத்தும் கச்சேரிகளில் தனது இசையில் உருவான பாடல்களை பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸும் அனுப்பினார். எஸ்.பி.பியும் இளையராஜா இசையில் தான் பாடிய பாடல்களைக் கூட கச்சேரிகளில் தவிர்த்து வந்தார்.இந்த காப்புரிமை பிரச்னையில் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி-க்கும் இடையே மனஸ்தாபம் நீடித்தது. இதனால் நீண்ட நாட்களாக இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. இதனால் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் ஜூன் மாதம் 2-ஆம் தேதி தமிழ்நாடு இசையமைப்பாளர்கள் சங்கம் ‘இசை கொண்டாடும் இசை’ என்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இளையராஜா இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கவுள்ளனர்.இதற்கான ஒத்திகை சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இதனால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இருவரும் சந்தித்துக் கொண்டனர். ஒத்திகையில் இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனவருத்தம் காரணமாக சில காலம் பிரிந்து இருந்த இவர்கள் இன்று சந்தித்ததை அறிந்த இசை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க