• Download mobile app
28 May 2026, ThursdayEdition - 3760
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபானி புயலாக உருவானது

April 27, 2019 தண்டோரா குழு

1180 கி.மீ, தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை ஃபானி புயலாக உருவாகும் என்ற நிலையில், புயலாக உருவானது.

ஃபானி புயல் குறித்து இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்,

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை ஃபானி புயலாக உருவாகும். 1180 கி.மீ, தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. நாளை காலை அதிதீவிர புயலாக பானி புயல் மாறும் என்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார். 29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிப்பில்;

இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மதியம் ஃபானி புயலாக மாறியது இந்த புயலானது இலங்கை கடல் பகுதியில் வடமேற்காக நகரக் கூடும். ஏப்.,30 ம் தேதி மாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஃபானி புயல் நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு தென்கிழக்கே 1850 கி.மீ.,ல் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 20 கி.மீ., வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. ஏப்.,30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் பரவலமாக கனமழை பெய்யக் கூடும். ஏப்.,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் கேரளாவில் கனமழை பெய்யும். ஏப்.,30 ஆந்திர தெற்கு கடலோர பகுதிகளிலும், மே 1 ம் தேதி ஆந்திர கடலோர பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபானி புயலாக உருவாகியுள்ளது.

மேலும் படிக்க