• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா 38 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !

April 13, 2019 தண்டோரா குழு

சூர்யா நடிப்பில் செல்வராகவனின் என்ஜிகே படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் நடித்து வந்தார். தற்போது அப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அப்படத்தை தொடர்ந்து இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் படம் சூர்யா 38. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக இப்படத்தில் பணிபுரிகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் பூஜை வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், தற்போது படத்தின் ன் டைட்டில் லுக் இன்று வெளியானது. இப்படத்திற்கு சூரரை போற்று என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க