• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவக்குமார் குடும்பத்தை சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கிய டி.ராஜேந்திரன் !

April 12, 2019 தண்டோரா குழு

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருகிறார்.

அவரது இரண்டாவது மகனான குறளரசன் இவர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல பாலிவுட் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். குறளரசன் தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரி 16-ம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாத்துக்கு மாறினார் குறளரசன். இவர்களுடைய திருமண வரவேற்பு, வருகிற 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் நடைபெறுகிறது. தற்போது குறளரசனின் திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக டி.ராஜேந்திரன் பல்வேறு பிரபலங்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார். இந்நிலையில், டி ராஜேந்தர் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரை தனது இளைய மகன் குறளரசனுடன் அவர்களது இல்லத்தில் சந்தித்தார். பின்னர், தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை அவர்களுக்கு நேரில் வழங்கினார்.

மேலும் படிக்க