• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த இயக்குநர் பாரதிராஜா

April 1, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.⭐சிவகார்த்திகேயனின் 16வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்
தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க