• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் 63 படத்தில் இணைகிறாரா ஷாருக்கான் ?

March 28, 2019 தண்டோரா குழு

தெறி’, ‘மெர்சல்’ படங்களை வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைத்துள்ள படம் தளபதி 63. பிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் ஃபேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதற்கிடையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுமட்டுமின்றி இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ஷாருக்கானை ட்விட்டரில் பின் தொடர்வதை அறிந்தனர்.

இதையடுத்து நடிகர் ஷாருக்கான் கவுரவத் தோற்றத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தளபதி 63 படத்தில் நடிப்பதாக செய்திகள் பரவின. ஆனால், படக்குழுவினர் இதனை மறுத்துள்ளனர்.

மேலும் படிக்க