• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

March 27, 2019 தண்டோரா குழு

பன்னிமடை அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை தர வலியுறுத்தியும் துடியலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த சிறுமி தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். பின்னர், விடிய விடிய குழந்தையை அனைவரும் தேடிய நிலையில், நேற்று அதிகாலை சிறுமி பிணமாக அதே பகுதியில் கிடந்தார்.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், சிறுமியின் பெற்றோர் குற்றவாளியை விரைவாக கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் துடியலூர் முக்கிய சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர், இருபுறமும் சாலையை மறித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க