• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நயன்தாராவின் சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன் பாருங்கள் – சமந்தா

March 26, 2019 தண்டோரா குழு

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கொண்ட நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்த சர்ச்சையான கருத்தை பதிவு செய்தார். இதனையடுத்து ராதாரவிக்கு விக்னேஷ் சிவன், ராதிகா, சின்மயி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் ராதாரவி பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு நடிகர் ராதாரவி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், நடிகர் ராதாரவியின் சர்ச்சையான கருத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்

தான் செய்தது சரி என நிரூபிக்க போராடுகிறார் ராதாரவி! நயன்தாராவின் சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன். மன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க