• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்று துவங்குகிறது IPL-12: முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி மோதல் வெற்றி யாருக்கு?

March 23, 2019 தண்டோரா குழு

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் 12வது ஐபிஎல் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியினை காண ரசிகர்கள் உற்சாகத்துடன் குவிந்துள்ளனர்.

மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணியும், விராட் கோலி தலைமையிலான அணியும் மோதிக் கொள்வதால், IPL-12 தொடரின் தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளதாகவே கருதப்படுகிறது. இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இந்நிலையில் போட்டியினை காண இன்று பிற்பகல் முதலே மைதானத்திற்கு ரசிகர்கள் வரத் தொடங்கி விட்டனர்.

இதுவரை இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 13 போட்டிகளில் சென்னை அணி 12 போட்டிகளில் வென்றுள்ளது. பெங்களூருவுக்கு எதிராக இங்கு நடந்த போட்டிகளிலும் 85% வெற்றியை சென்னை அணி பதிவு செய்துள்ளது. இதனால் இன்றைய போட்டியை வெற்றிக் கணக்குடன் சென்னை அணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க