• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி விவகாரம் – கோவை அரசு கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

March 15, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கு தொடர்பாக உரிய விசாரணை கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இவ்வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தொடர்பு உள்ளிட்டவை குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

இதனையடுத்து குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டணை வழங்க வேண்டுமென மாணவிகள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட அரசுகலைக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க