• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமான நிலையத்தில் குழந்தையை மறந்து விட்டு சென்ற தாய் – விமானத்தை திருப்பிய விமானி

March 12, 2019 தண்டோரா குழு

பெண் ஒருவர் தன் குழந்தையை விமான நிலைய காத்திருப்பு அறையிலேயே மறந்து விட்டதால் விமானத்தை திருப்பிய விமானி விநோதமான சம்பவம் வைரலாகி வருகிறது.

பொதுவாக நாம் வெளியூர் பயணிக்கும் போது நம்முடைய பொருட்களை மறந்து விடுவது வழக்கமான ஒன்று. ஆனால் பெண் ஒருவர் விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்டு விமானத்தில் ஏறிச் சென்ற விநோதமான சம்பவம் நடந்துள்ளது.சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெட்டாக்கில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சவுதி அரேபியா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்பட்ட சென்ற பின் திடீரென பெண் ஒருவர் தன் குழந்தையை விமான காத்திருப்பு அறையிலேயே மறந்து விட்டு வந்ததாக தெரிவித்து அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் விமானியிடம் இந்த தகவலை தெரிவிக்க உடனடியாக விமானி கன்ட்ரோல் அறைக்கு தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்து உள்ளார் .

பின்னர் மற்ற பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வேறு விமானம் தரை இறங்கும் நேரம் அனைத்தையும் சிறிது நேரம் மாற்றி அமைத்து தாய் சென்ற விமானத்தை விமான நிலையத்திற்கு விமானி திருப்பினார். இதுதொடர்பாக விமானி பேசும் ‘கிளிப்’ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தற்போது உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

மேலும் படிக்க