• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பம்.., சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு

March 12, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில், இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும், இந்த விவகாரத்து நீதி கேட்டு, பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு சில மணி நேரங்களிலேயே இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவேடுதுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் மூலம் சி.பி.ஐ விசாரணையை செய்யத் தொடங்கும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க