• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குறி சொல்லிக் கொண்டிருந்த பூசாரி தவறி விழுந்து பலி

March 8, 2019 தண்டோரா குழு

பக்தர்களுக்கு வாக்கு சொல்லும் போது 20 அடி மரத்தில் இருந்து தவறி விழுந்த கோவில் பூசாரி பரிதாபமாக இறந்தார்.தற்போது பூசாரி தவறி விழும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

கோவை பேரூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள ஊர் பொது கோயிலான ஐயா சாமி திருக்கோயில் மிகவும் பழமையானதாகும். இக்கோயிலில் அம்மாவாசை பௌர்ணமி நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோயிலில் ஐயாசாமி என்பவர் பூஜை செய்து வந்தார். ஆண்டு தோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருடந்தோறும் இரவு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அப்போது நள்ளிரவில் அக்கோயிலுக்கு வந்துள்ள பக்தர்களுக்கு கோவில் மைதானத்தில் அமைக்கப்பட்ட 20 அடி பூஜை செய்த மரத்தின் மீது அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு குறி சொல்வது வழக்கம், அதே போல இந்த ஆண்டும் நிகழ்ச்சி நடைபெற்ற போது பூஜை செய்யப்பட்ட மரத்தின் மீது ஏறி படுத்துக்கொண்டு ஆக்ரோஷமாக பக்தர்களுக்கு குறி சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி 20அடி கம்பத்திலிருந்து விழுந்த பூசாரி அய்யாசாமி படுகாயமடைந்தார். உடனே பக்தர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறி சொல்லிக் கொண்டிருந்த பூசாரி தவறி விழுந்து இருந்ததால் அப்பகுதியில் அங்குள்ள மக்கள் சோகத்தில் உள்ளனர். இதனிடையே பூசாரி மரத்தில் இருந்து தவறி விழும் வீடியோ காட்சி அப்பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க