• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்திரவு

March 7, 2019 தண்டோரா குழு

தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த கோரிய வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்க செயலர், நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாகவும், வரும் 10ஆம் தேதி கூட சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். அப்போது, மனுதாரர் , போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது தொடர்பாக போதுமான விழிப்புணர்வு முகாமோ விளம்பரங்களோ செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், நீதிபதிகள், நடிகர்கள் மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் என்றும், அவர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் போது அது எளிதாக மக்களை சென்றடையும் என்றும் கூறினர். இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க செயலர், நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க