• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் 65 வயது மூதாட்டிபாலியல் பலாத்காரம் – 17 வயது சிறுவன் கைது

March 5, 2019 தண்டோரா குழு

சென்னையில் 65 வயது மூதாட்டியை 3 சிறுவர்கள் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடிசைப் பகுதியில் 65 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு முதாட்டி தூங்கிக்கொண்டிருக்கும் போது கஞ்சா போதையில் 3 சிறுவர்கள் அந்த குடிசைக்குள் நுழைந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியில் வந்த போது அவர்களை அந்த சிறுவர்கள் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். அதனை அடுத்து கத்தி முனையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் 3 பேரில் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.விசாரணையில் அவன் எழில்நகரை சேர்ந்தவன் என்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்து கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க