• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரு நாடுகளுக்கிடையே போராக மாறக்கூடாது மத்திய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் – தொல் திருமாவளவன்

February 27, 2019 தண்டோரா குழு

இரு நாடுகளுக்கிடையே போராக மாறக்கூடாது மத்திய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

கோவை விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது புல்வமா தாக்குதலை அடுத்து இந்திய விமான படையினர் பதிலடித்த தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதல் ஆறுதல் அளிக்கிறது என்றாலும் இருநாடுகளுக்கிடையே போர் மூளூம் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உள்ள சூழலையை இந்தியா தவிர்த்து நல்ல முடிவு எடுக்க வேண்டும், இது நாடுகளுக்கிடையேயான போராக மாற கூடாது. அதை தடுப்பதற்கு தவிர்ப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், திமுக கூட்டணியில் முதல்கட்டமாக போட்டியிட விரும்பும் இடங்களின் பட்டியலை வழங்கி இருப்பதாகவும், உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்டும் எனவும் தெரிவித்தார் .திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக,இணக்கமாக வெற்றிகரமாக நிறைவேறும் என தெரிவித்த அவர்,காங்கிரஸ் மற்றும் இருங்கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு நடந்துள்ளது எனவும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்த தொய்வும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க