• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர்

February 27, 2019 தண்டோரா குழு

பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் இந்திய விமானப்படை நேற்று அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக கூறப்பட்டது. இதற்கிடையில், இன்று காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி புகுந்த பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று காலை முதல் இந்திய
பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில் பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த அபிநந்தன் இன்னமும் திரும்பவில்லை. அவர் சென்ற போர் விமானம் விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது. காணாமல் போன இந்திய விமானி, தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தவிவகாரம் குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘இந்திய விமானி ஒருவர் திரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட அபினந்தன் தாம்பரம் விமானப்படை மையத்தில் பயிற்சி பெற்று நிலையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார். அவரது தந்தை, வர்த்தமானும் ராணுவத்தில் பணியாற்றியவர். பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய விமானி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க