• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களின் கவனம் சீரியல்களில் இருந்து செய்தி தொலைக்காட்சிகளுக்கு திரும்பியுள்ளது பாராட்டத்தக்கது – நீதிபதிகள்

February 26, 2019 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் செய்தி சேனலில் வரும் பிரேக்கிங் செய்திகளால் சீரியல்களில் இருந்து செய்தி தொலைக்காட்சிகளுக்கு மக்களின் கவனம் திரும்பியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் செய்தித் தொலைக்காட்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தனியார் கட்டணச் சேனல்களில் விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கக் கோரி முகமது ரஃபீக் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தனியார் செய்தி தொலைக்காட்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அப்போது தமிழ்நாட்டில் செய்தி சேனலில் வரும் பிரேக்கிங் செய்திகளால் பெண்களின் சீரியல் மோகம் குறைந்துள்ளது. பெண்கள் சீரியல்களை தவிர்த்து, செய்தி சேனல்களை பார்க்க ஆரம்பித்துள்ளனர். பொதுமக்களின் மனம் மாசுபடாமல் இருக்க செய்தி தொலைக்காட்சிகள் துணையாக இருக்கின்றன என்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் டிராய், மத்திய ஒளிபரப்புத்துறை செயலாளர் ஆகியோர் வரும் மார்ச் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க