• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தளபதி 63 படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா ?

February 26, 2019 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸின் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக தளபதியுடன் இணைகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர்,விவேக்,யோகி பாபு,ஆனந்தராஜ்,டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் சூட்டிங் கடந்த மாதம் துவங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,இந்த படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், படம் முன்கூட்டியே வெளியிடப்படும் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த செய்தி உண்மையில் இல்லை வெறும் வதந்தி தான் , படம் திட்டமிட்டபடி தீபாவளி அன்று வெளியாகும் என படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்க