• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு பாக்.பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள்

February 25, 2019 தண்டோரா குழு

அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இந்திய கொடுத்தல் நடவடிக்கை எடுப்போம் என இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி புல்வாமா தகுதல் குறித்து பாகிஸ்தானை கடுமையா விமர்சனம் செய்திருந்தார் ” காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது. நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்க்ள் மீது நம்பிக்கை வையுங்கள். பவானி மாதா மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம்.

காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல. பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பலத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். இன்று பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட மனநிலை உருவாகியுள்ளது”
என்றார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ” பிரதமர் இம்ரான் கான் அளித்த வாக்குறுதியின்படி நடப்பார். புல்வாமா தாக்குதலில் உரிய, நம்பத்தகுந்த ஆதாரங்களை அளித்தால் உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி அமைதிக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க