• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா-பாக்.இடையேயான நதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு

February 21, 2019 தண்டோரா குழு

பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதி உள்ளிட்ட 3 நதிகளின் நீரை தடுத்து யமுனை ஆற்றை வளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் கண்டன முழக்கங்ககளை எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறி மத்திய அரசு, அந்நாட்டை உலக அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 விழுக்காடு வரி விதித்ததுடன், வர்தகத்துக்கு உகந்த நாடு எனும் சிறப்பு அந்தஸ்த்தையும் ரத்து செய்தது.

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,

இந்தியா-பாக்.நிதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதி, இந்துஸ் நதி உள்ளிட்ட ஆறுகளின் நீரை தடுத்து யமுனை ஆற்றை வளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ராவி நதியில் இருந்து உபரிநீரை பகிர்வதை நிறுத்தப்படும். இனி பாக்.கிற்கு வழங்கப்பட்டு வந்த நதிநீர் பங்கீட்டினை தடுத்து நிறுத்தி அதனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு திருப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் . இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தொடர் தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க