• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாணவர்களின் அறிவியல் அறிவை வெளிக்கொணரும் ரோபோட்டிக்ஸ் கண்காட்சி தொடக்கம்

February 21, 2019 தண்டோரா குழு

மும்பையை சேர்ந்த ஜஜடி இயென்ட்ரா ஆய்வக நிறுவனம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய ரோபோட்டிஸ் செயல்மாதிரிகள் வடிவங்களின் கண்காட்சி இன்று தொடங்கியது.

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் உள்ள ஜி.ஆர்.டி கல்லூரியில், மும்பையை சேர்ந்த இயென்ட்ரா ஆய்வக நிறுவனம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் இறுதி போட்டிகள் நடைபெறுகிறது. இதில், மாணவர்களின் பதினான்கு ரோபோட்டிக்ஸ் செயல்மாதிரிகளின் வடிவங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இன்று தொடங்கிய இக்கண்காட்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அறிவியல் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். சுமாராக, 70 மாணவர்களின் ரொபோடிக்ஸ் கண்டுபிடிப்புகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சி நாளை வரை நடைபெறவுள்ளது. மேலும், இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், ஐ.ஐ.டி மும்பையில் அவர்களது புதிய கண்டுபிடிப்பு செயல் வடிவத்தை காட்சிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இது குறித்து ஐயன்ட்ரா முதன்மை செயல் அலுவலர் டாக்டர். சசிகலா கூறுகையில்,

” இது மாணவர்களை தொழில் முனைவோராக ஆக்கும் முயற்சி. குறிப்பாக, அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது, என்றார்.

இந்நிகழ்ச்சியின், தொடக்க விழாவில் கல்லூரி செயலர் கீதா பத்மநாபன், இயக்குனர் ராதாமணி, கணினி அறிவியல் துறை முதல்வர் சாந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க