• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இந்த ஆண்டு 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது – அமைச்சர் செங்கோட்டையன்

February 21, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் நடப்பாண்டில் 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடதுவதற்காக மத்திய அரசு விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. முதலில் இந்த விதிமுறைப்பு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தற்போது அதற்கு மத்திய அரசின் முடிவிற்கு செவிசாய்த்துள்ளது என தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஆலோசனைப்படி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வந்தன. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூட வெளிவந்தன.

மேலும் அதில் “5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்கள் ரூ.100 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணிநேரம் நடைபெறும்” என அந்த சுற்றறிக்கையில் மூலம் தெரிவிக்கபட்டிருந்தது.

இதனை தொடந்து, இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளா்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

” 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து துறை ரீதியாக தயார் ஆகிவருகின்றனர். ஆனால் ஆணை பிறப்பிப்பது அரசு தான் பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தில் நடப்பாண்டில் 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது. பொதுத்தேர்வு குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. அது குறித்து அரசு எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. ஆணை பிறப்பித்தால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும். தேர்வை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க