• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும் – தம்பிதுரை

February 20, 2019 தண்டோரா குழு

மத்திய அரசில் இதுவரை அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டது. அதனால் தான் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை கேட்டுக் கொண்டே
இருந்தோம். இனி அந்த நிலை மாறி வாங்கும் சூழல் ஏற்படும் என மக்களவை துணைசபாநாயகா் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூரில் பசுபதிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணைசபாநாயகா்
தம்பிதுரை,

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும். கூட்டணி ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும். இதுவரை மத்திய அரசில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டது. அதனால் தான் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை கேட்டுக் கொண்டே இருந்தோம். இனி அந்த நிலை மாறி வாங்கும் சூழல் ஏற்படும். இதுவரை மத்திய அரசு 20, 000 கோடி தமிழகத்திற்கு தரவேண்டி உள்ளது.

இனி 50,000 கோடி கூட கேட்டுப் பெற முடியும். அதிமுக பிஜேபி கூட்டணி குறித்து திருநாவுக்கரசு சொல்வதற்கு அவர் தற்போது எந்த பதவியிலும் இல்லை. திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் பதவியை தற்போது திருநாவுக்கரசுக்கு போய்விட்டது அதனால் அவர் கூறும் கருத்தை தற்போது ஏற்க இயலாது. இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. தற்போது அமைந்துள்ள கூட்டணி வெற்றி பெற்ற பிறகு இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு காணப்படும்” ennஎன அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க