• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர் இடமாற்றம்

February 16, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்திரவிட்டிருந்தார். மேலும், அதிகாரிகளை மாற்றம் செய்து, பட்டியலை வரும் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவும் உத்திரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றப்பட்டு திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஷ்ராவன் குமார் ஜட்டாவத் கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்ட்டுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஹரிஹரன் நகராட்சி நிர்வாக சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாமணி கோவை ஆட்சியராக பொறுப்பேற்க்கவுள்ளார். மேலும், பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க