• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருச்சி விமான நிலையம் வந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல் : தலைவர்கள், அதிகாரிகள் அஞ்சலி

February 16, 2019 தண்டோரா குழு

திருச்சி விமான நிலையம் வந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உடலுக்கு தலைவர்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற வாகனங்கள் மீது வெடிமருந்து நிரப்பிய காரை பயங்கரவாதி ஒருவன் மோத செய்தான். இந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில், தமிழக வீரர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் உடல்கள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தன. அப்போது அவர்களது உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் அன்பில் பொய்யாமொழி, செளந்தரராஜன் திருச்சி, அரியலூர் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

அங்கிருந்து சிவசந்திரனின் உடல் ராணுவ வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதே தனி விமானம் மூலம் மற்றொரு வீரரான சுப்பிரமணியத்தின் உடல் அங்கிருந்து மதுரை விமான நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ வாகனம் மூலம் அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் படிக்க