• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் இருவருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி

February 15, 2019 தண்டோரா குழு

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இச்சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த பாதுகாப்பு படைவீரர்களின் குடும்பத்திற்கு என்னுடையை ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இருவர் வீரமரணம் அடைந்துள்ள செய்தி எனக்கு மிகவும் மனவேதனை அளித்தது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மேலும், வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி உடனடியாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க