• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் 13 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்

February 14, 2019 தண்டோரா குழு

அமெரிக்காவில் நெவேடா, டெக்சாஸ், நெப்ராஸ்கா, ஓஹியோ, விர்ஜீனியா, தெற்கு கரோலினா உள்ளிட்ட இடங்களில் கூகுள் நிறுவனம் புதிய டேட்டா மையங்கள் மற்றும் அலுவலகங்களை கட்டமைக்க உள்ளது.

இதற்காக கூகுள் நிறுவனம் இந்த ஆண்டில் அமெரிக்காவில் 13 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய மையங்களை கட்டுவதன் மூலம் அமரிக்காவில் பல ஆயிரம் பேருக்கு வேலைகிடைக்க வாய்ப்பு என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அமெரிக்காவில் தங்களது மையங்கள் விரிவாக்கத்திற்காக 9 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.தற்போது கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் 21 மாநிலங்களில் மையங்கள் உள்ளன. இந்த விரிவாக்கத்தின் மூலம் அமெரிக்காவில் 24 மாநிலங்களில் கூகுள் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க