• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

February 14, 2019 தண்டோரா குழு

ஜம்மு-காஷ்மீர் அவந்திபுரா பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகாரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. தொடர்ந்து பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளனர்.சமீபத்தில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய மோசமான தாக்குதல் இதுவாகும்.

பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க