• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 18 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழப்பு

February 14, 2019 தண்டோரா குழு

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் பரிதாபமாக உயரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் இருந்து ஸ்ரீநகருக்கு 54பி பட்டாலியனைச் சேர்ந்த 20 சி.ஆர்.பி.எப் வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனம் அவந்திப்போரா பகுதியில் உள்ள லாதூமோட் என்ற இடத்தின் அருகே சென்ற போது, தீவிரவாதிகள் அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். இதனால் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதன்பின்னர் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வாகனங்களும் சேதமடைந்துள்ளன. மேலும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வாகனத்தில் அதிகமான வீரர்கள் சென்றதால் உயிர்ப்பலி அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

மேலும் படிக்க