• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிராயின் புதிய அறிவிப்பை அமல்படுத்துவதற்கான கால அவகாச நீட்டிப்பை உடனே நடைமுறைப்படுத்த கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

February 13, 2019 தண்டோரா குழு

டிராயின் புதிய அறிவிப்பை அமல்படுத்துவதற்கான கால அவகாச நீட்டிப்பை உடனே நடைமுறைப்படுத்தவும், ரூ.200க்குள் பொதுமக்கள் விரும்பும் சேனல்களை பெரும் வகையில் அறிவிப்பில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தி கோவையில் கேபிள் டிவி ஆப்பிரேட்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிராய் எனப்படும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153.40 கட்டணத்திற்கு தேர்வு செய்து கண்டுக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. புதிய கட்டணம் மாதம் ரூ.130 அதற்கான ஜி.எஸ்.டி.யை சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய் ஆகிறது. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100சேனல்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும் என்றும், இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலாகி வருகிறது. ஏற்கனவே, டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த நடைமுறையை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும், இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும் கூறி கேவில் டிவி ஆப்ரேட்டர்கள் கோவை 100அடி சாலையில் ஆம்னி பேருந்து நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவன அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர.

அப்போது, ஜி.எஸ்.டி.யில் விளக்கு அளிக்கப்பட வேண்டும் அல்லது வரியை 18சதவீதத்திலிருந்து 5சதவீதமாக் குறைக்க வேண்டும், தற்போது சாதாரண நடுத்தர குடும்பத்தினர் ரூ.400க்கும் மேல் செலவழித்து சேனல்கள் பெரும் நிலை உள்ளதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுல்ளத்தால் ரூ.200க்குள் அனைத்து சேனல்களும் பெரும் வகையில் கட்டண முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க