• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷ் படத்தில் நடிக்கும் நடிகர் கருணாஸின் மகன் !

February 2, 2019 தண்டோரா குழு

பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘மாரி 2′ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு தனுஷின் அசுரன் படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது.

வெற்றி மாறன் இயக்கவுள்ள இப்படம் வெக்கை’ என்ற நாவலின் தழுவலாம். இந்த படத்தை ‘V கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைபுலி தாணு இப்படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கும் இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். ஜனவரி 26ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

இந்நிலையில், இப்படத்தின் நடிகர் கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கென் கருணாஸ் இதற்கு முன் நெடுஞ்சாலை, அழகு குட்டி செல்லம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே தனுஷுடன் கருணாஸ் தேவதையை கண்டேன், பொல்லாதவன், யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது கருணாஸின் மகனுடன் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க