• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயை கொடுமைப்படுத்துவதாக மகன் ஆட்சியரிடம் புகார்

January 29, 2019 தண்டோரா குழு

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயை ஏஜென்சியனர் அடித்து சித்ரவதை செய்து அவரை இந்தியாவிற்கு வர முடியாத படி கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதால் தனது தாயை மீட்டு தரக்கோரி மகன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அம்மன்குளத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி சாமுண்டீஸ்வரி 43. இவர் பொள்ளாச்சியை சேர்ந்த அஸ்லாம்கான் என்பவரின் மூலம் டூரிஸ்ட் விசாவில் வீட்டு வேலைக்காக ஓமன் நாட்டிற்க்கு சென்றுள்ளார். அஸ்லாம்கான் சாமுண்டீஸ்வரியை வேலைக்கு அனுப்ப ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்ஸியிடம் 1லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்ஸியினர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக தனது மகன் விக்னேஸிடம் சாமுண்டீஸ்வரி அழைபேசியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனால் தனது தாயாரை ஓமன் நாட்டில் இருந்து மீட்டு தருமாறு அவரது மகன் விக்னேஷ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து சாமுண்டீஸ்வரியின் உறவினர் சித்ரா கூறுகையில்,

என் அத்தையை வீட்டுக்கு வேலைக்காக அழைத்து சென்ற ஏஜென்சியினர் உணவு கொடுக்காமல்,அடித்து சித்ரவதை படுத்தி வருகின்றனர். அதேபோல் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து வைத்துள்ளனர். இதனால் அவரின் நிலைமை கேள்விகுறியாக உள்ளது. ஆகவே அவரை உடனடியாக ஓமனில் இருந்து மீட்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க