• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

January 29, 2019 தண்டோரா குழு

கோவையில், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி.அலுவலகம் முன்பாக கோவை கோட்ட முகவர்கள் சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை கோட்ட செயலாளர் ரகுராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கோரிக்கைகளை வலியுறித்தி கோசங்கள் எழுப்பினர்.

இதில்,எல்.ஐ.சி., பிரீமியத்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை நீக்க வேண்டும். பாலிசிதாரர்களுக்கான போனஸ் தொகை குறைக்கப்பட்டுள்ளதை அதிகரிக்க வேண்டும். எல்.ஐ.சி., நிறுவனம் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ள நலிந்த நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது. முகவர்களுக்கான கமிஷன் தொகை குறைக்கப்பட்டதை அதிகரிக்க வேண்டும். முகவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட, 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை கோட்ட தலைவர் நட்ராஜ்,

கடந்த ஒரு மாதமாக கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்., 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தெண்மண்டல செயலாளர் சக்கரவர்த்தி ராஜா,மற்றும் கோவை கோட்ட நிர்வாகிகள் மருதாசலம்,தியாகாராஜன் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க