• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி பேச மேத்யூ சாமுவேலுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம் !

January 23, 2019 தண்டோரா குழு

கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சருக்கு எதிராக பேசவோ, ஆதாரங்களையோ வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலளிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டது புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், பத்திரிகையாளர் மேத்யூவுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடுகேட்டு வழக்கு
தொடர்ந்துள்ளார். அதில், தன்னை பற்றி மேத்யூ, சயன், மனோஜ் பேசுவதற்கு தடை விதிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதல்வர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக நீதிபதி கல்யாண சுந்தரம் தற்போது விசாரித்தார். அப்போது, கோடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதற்கு மேத்யூஸ், சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு தடை நீதிபதி தடைவிதித்தார். இதுமட்டுமின்றி, ஆதாரங்கள் இல்லாமல் ஆவணங்களை வெளியிடவும் தடை விதித்தார். மேலும், முதல்வர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 7 பேரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி கல்யாண சுந்தரம் ஜனவரி 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க