• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியுசிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி !

January 23, 2019 தண்டோரா குழு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய குப்தில் மற்றும் மன்றோ ஆகியோராது விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே அடுத்தடுத்து முகமது ஷமி வீழ்த்தினார். இதன் மூலம் வெறும் 56 ஒருநாள் ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றார்.
பின்னர் இந்திய அணி பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமால் நியுசிலாந்து அணி 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை அடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாடினர். ஆனால் இந்திய அணியினர் சூரிய ஒளியால் பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். இதனால் ஆட்டம் அரை மணிநேரம் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 49 ஓவர்கள் வரை பந்து வீச முடிவானது. வெற்றி இலக்கு 156 ஆக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த வந்த கோலியும், தவானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி 45 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் 35 ஆவது ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 156 என்ற வெற்றி இலக்கை எட்டியது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் தவான் 75 ரன்னும், ராயுடு 13 ரன்னும் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க