January 12, 2019
தண்டோரா குழு
கோவை விழாவின் ஒரு பகுதியாக பழைய கார் மற்றும் பைக் கண்காட்சி தனியார் மாலில் நடைபெற்றது.
கோவை விழாவின் ஒரு பகுதியாக தனியார் மாலில் பழங்காலத்து பழைய கார் மற்றும் பைக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை ஆர்எச்ஆர் கு௫ப் சேர்மன் ரத்னவேலு சிறப்பு வி௫ந்தினராக இந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். மேலும் இதில் பழமைவாய்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் அணிவகுத்து நின்றன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் இந்த கார்களின் பெயர்கள் மோர்ஸ் 8 சீரியஸ் -1941,புல்மேன் மெர்டிஸ்பென்ஸ் -1974, போர்டு ஜீப் -1958, அஸ்டன்-7 -1947, மோரிஸ் மைனர் -1951, ஓல்ஸ்வேகன் பீட்டல்-1957, மற்றும் போர்டு-A-1929 மற்றும் பைக் எஸ் டி ஜாவா மற்றும் 3 டயர் கார் மெசர்ஸ்மித் -1955 மற்றும் வில்லியம்ஸ் ஜீப் போன்ற பல வகையான பழங்காலத்து கார் வகைகள் அணிவகுத்து நின்றன.
இந்நிகழ்ச்சியில் பிரதிப் கி௫ஸ்னராஜ், பிரசன்னா மற்றும் புரோசோன் பிரவின் மித்தல் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர் மற்றும் ஏராளமான
பொதுமக்களும் பார்வையிட்டு சென்றனர்.