தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் (காபி வித் கரண் நிகழ்ச்சியில்) சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இந்தியில் புகழ்பெற்ற காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குநர் கரண் ஜோஹர் பல கேள்விகளை கேட்டார். அதற்கு வெளிப்படையான பதில்களை இருவரும் கொடுத்தனர்.
அப்போது பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும், அதனைப் பற்றி தனது வீட்டில் வெளிப்படையாக பேசுவதையும் பற்றி ஹர்திக் பாண்டியா கூறினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து இது குறித்து பிசிசிஐயிடம் இருந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு எச்சரிக்கை அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், “காபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் பேசிய யாரையும் புண்படுத்தும் விதத்தில் இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். நிகழ்ச்சியின் தன்மையை நினைவில் கொண்டே நான் பேசினேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு அவர்கள் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இனி கிரிக்கெட்டுக்கு தொடர்பு இல்லாத ஊடக நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கும் திட்டத்தில் பிசிசிஐ இருப்பதாக தெரிகிறது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு