• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் தொடங்கியது டீசல் டோர் டெலிவரி

January 3, 2019 தண்டோரா குழு

முதல் முறையாக வீட்டு வாசலுக்கே வந்து டீசல் விற்பனை செய்யும் திட்டதை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக வீட்டு வாசலுக்கே வந்து எரிபொருள் டெலிவரி செய்யும் திட்டத்தினை புனே மற்றும் மகாராஷ்ட்ராவில் இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த மார்ச்சில் தொடங்கியது. இதையடுத்து போட்டி நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் மும்பை நகரில் எரிபொருள் டெலிவரி செய்யும் திட்டத்தினை தொடங்கியது. இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இத்திட்டத்தினை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தது.

இதையடுத்து தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் சோதனை முயற்சியாக இத்திட்டத்தினை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இதற்காக 6,000 லிட்டர் கொள்ளளவுடன், மொபைல் டிஸ்பென்சருடன் கூடிய தீப்பற்றாத இன்ஸுலேட்டட் டேங்கர் லாரிகளில் இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. குறைந்தபட்சமாக 200 லிட்டர்கள் முதல் ஆர்டர் கொடுக்கலாம், 2,500 லிட்டர்களுக்கு மேல் ஆர்டர் கொடுப்பவர்கள், எரிபொருளை பாதுகாப்பாக சேமிக்கும் வசதிக்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Repose என்ற விஷேச mobile app மூலம் இந்த ஆர்டர்களை கொடுக்கலாம் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. பெட்ரோல் விரைவில் ஆவியாகும் தன்மை கொண்டதால் தற்போதைக்கு பெட்ரோல் இத்திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படாது என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அதிகளவில் டீசல் பயன்பாட்டினை கொண்டிருக்கும் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கானது என்றும் தனி நபர் வாகனங்களுக்காக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் அடுத்து பெட்ரோல் டோர் டெலிவரி செய்யப்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க