• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்றாவது டெஸ்ட்: 151 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா

December 28, 2018 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில், டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.

இருஅணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம்மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இப்போட்டியில் முரளிவிஜய் மற்றும் கே.எல் ராகுலுக்கு பதில் ஹனுமா விஹாரியும், மயங் அகர்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி
7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. புஜாரா சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 2 விக்கெட்டையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் தங்களது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி 8 ரன்கள் எடுத்த போது 2ம் நாள் ஆட்ட நேரம் முடிந்தது. 3-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் பின் தங்கியுள்ளது. தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

மேலும் படிக்க