• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முழுஅடைப்புக்கு திரையுலகினர் ஆதரவு: நாளை படப்பிடிப்புகள் ரத்து

September 15, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள முழுஅடைப்புக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தாணு அறிவித்துள்ளார்.

காவரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் திரைப்படத்துறையினர் பங்கேற்பார்கள் என்று திரைப்படக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இது தொடர்பாக திரைப்படக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து நாளை நடைபெறும் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் கலந்துகொள்ளும்.

இதற்காக, எங்கள் திரையுலகம் சார்பில் திரைப்பட படப்பிடிப்புகள், பாடல் பதிவு, டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடைபெறாது.மேலும், திரையரங்குகளில் காலை முதல் மாலை வரை காட்சிகள் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைபடத்துறையின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க