• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நோ கட், யூ சான்றிதழ் ஃபேமிலி என்டர்டெய்னராக விஸ்வாசம் !

December 24, 2018 தண்டோரா குழு

இயக்குநர் சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் பேட்ட படத்துடன் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள விஸ்வாசம் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டது. எந்த காட்சிகளும் நீக்கப்படவில்லை. தல அஜித் மற்றும் சிவா கூட்டணியில் இதுவரை வெளியான வீரம், வேதாளம் படத்திற்கும் U சான்றிதழ் தான் வழங்கப்பட்டது. இந்த இரண்டு படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது. அந்த வகையில் விஸ்வாசம் படமும் வெற்றி படமாக அமையும் என தல ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க