இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சஞ்சு சேம்சன், தனது நீண்ட நாள் காதலியான சாரு நாயரை இன்று திருமணம் செய்து கொண்டார்.
கேரளாவை சேர்ந்தவர் சஞ்சு சேம்சன். தனது 19வது வயதில் ஐபிஎலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த இவர் IPL-லில் அரைசதம் அடிக்கும் மிக இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். பின்னர் தனது 21வது வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையில், கல்லூரியில் இளங்கலை பயிலும் போது இவருக்கும் சாரு நாயர் என்பருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து நீண்ட நாள் காதலியான சாரு நாயரை, சேம்சன் இன்று திருமணம் செய்து கொண்டார். இந்து மதத்தை சேர்ந்த சாருவும், கிறிஸ்தவரான சேம்சனும், சிறப்பு திருமண சட்டத்தின் படி இன்று மணம் முடித்தனர். திருவனந்தபுரத்தின் கோவளம் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இரண்டு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களது திருமணம் நடைபெற்றது. இரண்டு குடும்பத்தை சேர்ந்த 30 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக சேம்சன் தெரிவித்தார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்