• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா ராஜினாமா!

December 22, 2018 தண்டோரா குழு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்த ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான எம்.எல்.ஏ. அல்கா லம்பா அவரது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சஜன் குமார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதனால் கலவரத்தை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா பட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான எம்.எல்.ஏ அல்கா லம்பா ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. தான் ராஜினாமா செய்ய தயார் என்றும் அல்கா கூறியுள்ளார்.

மேலும், ராஜீவ் காந்தி நாட்டிற்காக தியாகம் செய்தவர் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று லம்பா தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க