• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஒபாமா !

December 20, 2018 தண்டோரா குழு

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடம் அணிந்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று
இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்னும் 5 நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா வாசிங்டனில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு மாறுவேடத்தில் சென்றார். கிறிஸ்துமஸ் தாத்தா குல்லாவுடனும், மூட்டை பை நிறைய பரிசுப் பொருட்களுடன் மருத்துவமனைக்கு வந்த ஒபாமாவைக் கண்ட அங்கிருந்தவர்கள் மருத்துவமனை என்றும் பாராமல் ஆரவாரித்து மகிழ்ந்தனர். மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள குழந்தைகளை பார்த்த ஒபாமா அவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்கள், பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார்.
அங்கு இருந்த குழந்தைகள் ஒபாமாவை அரவணைத்தும், நடப்பதை நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்து போயினர்.

மேலும் படிக்க