• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘2.0’

December 5, 2018 தண்டோரா குழு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் கடந்த 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

லைகா தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில், அக்சய் குமார், எமிஜாக்சன் நடிப்பில், 3D தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது. இப்படம் உலகம் முழுக்க வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

இதற்கிடையில் 2.0 படம் வெளியான நான்கு நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படத்துக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்த வண்ணமாகவே உள்ளது. இந்நிலையில், 2.0 படம் வருகிற மே 2019ல் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது. 2.0 படத்தின் சீன ரிலீஸ் உரிமையை எச்.ஒய் மீடியோ கைப்பற்றியிருக்கிறது.

சீன மொழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்த படத்தை மொத்தமாக 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க