• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா பயோ பிக் : ’தி ஐயன் லேடி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

December 5, 2018 தண்டோரா குழு

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் பிரியதர்ஷினி. இவர் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கவுள்ளத அவர் அறிவித்திருந்தார்.

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. ‘தி அயர்ன் லேடி’ (The Iron Lady) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதனை ‘பேப்பர் டேல் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. தற்போது இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 5-ஆம் தேதி) ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, விஜய் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் தனித்தனியாக இயக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க